Periyasamy Thooran Ninaivu Kurippukkal / ம.ப.பெரியசாமித்தூரனின் நினைவுக்குறிப்புகள்



  • ₹260

  • SKU: SA0032
  • ISBN: 9789388468923
  • Author: Sirpi Balasubramaniam
  • Language: Tamil
  • Pages: 290
  • Availability: Out Of Stock

ம. ப. பெரியசாமித் தூரன் (1908-1987) தமிழ் இலக்கியத்துக்கும் மொழிக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய மகத்தான மனிதர்.

இதழியல், குழந்தை இலக்கியம், சிறுகதை, நாடகம், அறிவியல், உளவியல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, கட்டுரை, கவிதை, இசைப்பாடல் எனப் பல்துறைத் தமிழுக்கு வளமும் வனப்பும் சேர்த்தவர்.

மாணவப் பருவத்தில் 'பித்தன்', பிற்காலத்தில் 'காலச்சக்கரம்' என இதழ்கள் நடத்தியவர். இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக கலைக்களஞ்சியம் (10 தொகுதிகள்), குழந்தைகள் கலைக்களஞ்சியம் (10 தொகுதிகள்) உருவாக்கியளித்தவர்.

தமிழ்க் குழந்தை இலக்கிய வரலாற்றில் இவருக்குச் சிறப்பிடம் உண்டு. தமிழிசைப் பாடல்களால் இசையுலகில் அழியா இடம் பெற்றவர்.

பத்ம பூஷண் விருது (1968), இசைப் பேரறிஞர் விருது (1972), தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது (1970), எம். ஏ. சி. அறக்கட்டளையின் அண்ணாமலை செட்டியார் விருது ஆகிய சிறப்புகள் பெற்றவர்.

அவரை நோய் முடக்கிய முதுமைக் காலத்தில் படுக்கையிலிருந்து கூறிய எண்ணங்கள் எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. குடும்பத்தார் அனுமதியுடன் அவை இங்கு நினைவுக் குறிப்புகளாக இடம் பெறுகின்றன.

சிற்பி பாலசுப்பிரமணியம்: பெரியசாமித் தூரனைக் குறித்து இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் அகாதெமிக்காக ஒரு நூலையும், தூரன் நூற்றாண்டு விழாப் பொழுதில் பாரதிய வித்யா பவனுக்காகத் 'தொண்டில் கனிந்த தூரன்' நூலையும் எழுதியவர்.

கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர் எனப் பன்முகம் கொண்ட இவர், சாகித்திய அகாதெமியின் தமிழ் மொழி ஒருங்கிணைப்பாளர் ஆவார் (2018 -2022).

 

Write a review

Captcha